சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய அனுசரணையுடன் சிறுவர்களுக்கான கணணி பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒத்துளைப்புடன் கிராமிய சிறுவர்களுக்கான கணணி பயிற்சி நிலையத்தினை கிளிநொச்சி கனகபுரம் வீதியில் கிளிநொச்சி மாவட்ட தலைமைச்செயலக உதவி அரசாங்க அதிபர் ப.ஜெயராணி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் அரச, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளும், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.