“கல்விக்காக ஏங்குகின்ற சிறுவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக ஒன்றிணைவோம்”

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம்(CFCD) இலங்கையில் பதிவு செய்யப்பட்டதோர் அரச சார்பற்ற நிறுவனம். எமது நிறுவனம் சிறுவர்களது நலன் நோக்கியதாக செயற்பட்டு வருகிறது. யுத்தத்தின் பின்னர் பெண்கள் தலைமையேற்கும் குடும்பங்களின் சிறுவர்களது கல்வி அவர்களது வாழ்வாதாரம் உளவளத்துணை ஆலோசனைக்கான தேவை ஆகியன தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டில் அரசின் இலவசக்கல்விக்கு அமைவாக இலவசப் பாடப்புத்தகங்கள், இலவச சீருடை என்பன நடைமுறையில் உள்ள போதிலும். மாணவர்களது கல்வித் தேவை பூர்த்தியடைந்துவிடவில்லை. அப்பியாசக் கொப்பிகள் எழுது கருவிகள் சீருடை தைத்தல் பிரத்தியேக வகுப்புகள் என்று மேலதிக தேவைகள் பெருமளவில் காணபடுகிறது . எந்தவொரு தாய்க்கும் தனது பிள்ளையின் கல்வி வாய்ப்பே முதன்மையான தேவையாக அமையும். அதனை வழங்கக்கூடிய வாய்ப்பு இல்லாது போகும்போது விரக்தியின் விளிம்புக்கே செல்கிறார்கள்.
யுத்தத்தின் பாதிப்புகளினால் குடும்ப சுமையினை பெண்கள் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கான உதவித்திட்டம் ஒன்றை செயற்படுத்தி வருகின்றோம். இப்பணிகளுக்கானஅதிக பட்ச பங்களிப்பை உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற எமது உறவுகளும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுமே வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு பிள்ளைக்கும் வழங்கப்படுகின்ற உதவியானது மாதாந்தம் ரூபா 1000.00 முதல் ரூபா 1500.00 வரையான சிறிய தொகையாக இருந்த போதும் அந்தக் குடும்பங்களை பொறுத்தவரை பெரிய உதவியாகவே அமைகின்றது. நாங்கள் களத்திலிருந்து பணியாற்றுகின்றவர்கள் எனும்வகையில் தினம் தினம் எமது மக்கள் எதிர்நோக்குகின்ற அவலங்களை பார்க்கின்றோம். எமது சேவைகளை விரிவாக்க வேண்டிய தேவைகளை புரிந்து கொள்கிறோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் தேவையில் பல நிறுவனங்கள் பங்காற்றி வருகின்றனர் அவ்வகையில் எம்மால் தற்போது 7௦௦ பிள்ளைகளுக்கு மாதாந்த உதவியாக வழங்கப்படுகிறது. தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளமையல் எம்மால் வழங்கப்படும் இவ்வுதவியை மேலும் ஒரு சில நூறு குடும்பங்களுக்காவது விரிவாக்க வேண்டிய அவசர அவசிய தேவையை உணர்கிறோம். இதனை ஒவ்வொருவரும் தமது கடமையாக ஏற்று தீவிரமாக செயற்படு;வோமாயின் சாதிக்க முடியுமென திடமாக நம்புகிறோம். வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது உறவுகள் இத்திட்டத்துக்கு பங்காற்ற விரும்புபவர்களாயின் எம்முடனோ அல்லது எமது திட்டத்துக்கு பங்காற்றிவரும் எமக்கு உதவுகின்ற அமைப்புகளான பின்வருவோருடனோ தொடர்புகொண்டு உதவியளிக்க முடியும் என்பதனை தயவுடன் அறியத்தருகின்றோம்
1. Child first –Uk
2. Save the people –Norway
3. Tech out rich –Malaysia
4. Ceylon student education fund –Australia
5. Cares foundation – Australia

எமது சமூகம் எப்போதும் தமது சேமிப்பாக பணத்தையோ சொத்தையோ மட்டும் பார்ப்பவர்களல்லர். தாங்கள் ஆற்றுகின்ற நற்பணிகளையும் சேமிப்பாகக் கருதுபவர்களே. ஆகவே எமது மண்ணில் வாழ்கின்ற நல்உள்ளங்களும் இப்பணியில் இணைந்து சேவையற்ற முடியும். இன்றும் இவ்வாறாக பலர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இப்பணியில் இணைந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.
இத்தகைய கல்வி உதவித்திட்டதுக்கு தெரிவாகும் மாணவர்களின் விபரங்கள் எமது களவிஜய ஆய்வுகளின் பின்னர் அவர்களின் உதவிக்கான கோரிக்கையுடன் அவர்களின் குடும்பநிலை பாதிப்பு தொடர்பான கிராமஅலுவலர், பிரதேச செயலரின் உறுதிப்படுத்திய ஆவணம் மற்றும் மாணவர்களின் தொடர்பு இலக்கத்தையும் வழங்க முடியும். மாணவனுக்கு நேரடியாக உதவ விரும்பினால் அவர்களது வங்கிக்கணக்கு இலக்கமும் எம்மால் பெற்று வழங்க முடியும். இவ்விடயங்கள் தொடர்பாக எங்களுடன் கீழ்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தயவுடன் கோருகின்றோம்.
சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம்
இல 254 கண்டி வீதி, அரியாலை,யாழ்ப்பாணம்
தொலைபேசி .இல –021 222 0483
கைதொலைபேசி – 0777238686
மின்னஞ்சல் : cfcdeve@gmail.com

“உங்கள் ஆதரவு எமது பணிகளை வலுப்படுத்தி அவலங்களுடன் வாழ்கின்ற எம்மவரின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தட்டும்”