மனிதம் பண்பாட்டு விழுமியங்களுடன் வாழ்வதற்கான பிரார்த்தனை

சகோதரி வித்தியாவிற்கு ஏற்பட்ட அவலம் எம் அனைவரையுமே வெகுவாகப் பாதித்துள்ளது. இவருக்காகவும் இவரைப்போன்ற என் இளம் தளிர்களுக்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்வுக்காக 06 மணி நேரங்களை உணர்வுபூர்வமாக பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தித்தந்துள்ள வாய்ப்பு கௌரவத்துக்குரியதாகும்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மதப்பெரியார்கள், வைத்திய அதிகாரிகள், சிறுவர்கள் பெண்கள் நலம் சார்ந்து பணியாற்றும்   அதிகாரிகளின் கருத்துரைகளும் சமய அமைப்புக்களின் பிரார்த்தனை நிகழ்வுகளும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மேடை ஆற்றுகை நிகழ்வுகளும் ஏனைய விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இதனை நாங்கள் உணர்வுபூர்வமாக பயன்படுத்தி வித்தியாவுக்கும் அவரை போன்று நாம் இழந்து நிற்கும் ஏனையவர்களுக்காகவும்  அஞ்சலி செலுத்துவதுடன் எமது மனங்களை ஆற்றுப்படுத்தி எமது சமூகம் பண்பாடு, விழுமியங்களுடன் வாழப்பிரார்த்திப்போம். ஆகவே இந்நிகழ்வில் கலந்துகொண்டு உங்கள் பங்களிப்பை வழங்க கிடைத்துள்ள வாய்ப்பினை பயன்படுத்துமாறு அன்பாக அழைக்கின்றோம்   

இடம் : யாழ் வீரசிங்கம் மண்டபம் 

காலம்  : 28.06.2015  ஞாயிற்றுக்கிழமை

                  காலை   மணி முதல் மாலை   மணிவரை